Categories
தேசிய செய்திகள்

BREAKING : விக்ரம் லேண்டர்… தொடர்பை இழந்தது எப்படி..? இஸ்ரோ ஆய்வு

விக்ரம் லேண்டர் தொடர்பை இழந்தது எப்படி என்று இஸ்ரோ ஆய்வை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த 7ஆம் தேதி நள்ளிரவு விக்ரம் லேண்டர் பெங்களூருவில் இருக்கக்கூடிய தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பை இழந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான பணியை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வந்தனர். மேலும்  விக்ரம் லேண்டரின் ஆயுள் காலம் நாளையுடன் முடிவடைய இருக்கின்ற நிலையில் ,

விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது எப்படி என்று இஸ்ரோ ஆய்வு நடத்த இருக்கின்றது. இதை தேசிய நிபுணர்கள் குழு , விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் சந்திரயான்-2 திட்டத்தில் விண்ணில் ஏவப்பட்ட ஆர்பிட்டர் திட்டமிட்டபடி பணியை தொடர்கிறது என்று இஸ்ரோ அறிவித்திருக்கிறது.

Categories

Tech |