இன்று காலை கடலூர் மற்றும் திருப்பூரில் அரசு பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதியம் மற்றும் ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தக்கோரி வேலை நிறுத்தப்போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அரசு பஸ் தொழிலார்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை வரும் 20ஆம் தேதி சென்னை குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெறம் என நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அரசு பஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.