வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரக்கூடிய காரணத்தினால், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர், சேலம், கரூர், நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முக்கியமாக நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து கன முதல் மிக கனமழையானது உள் மாவட்டங்களில் பெய்து வந்தது. அதனை ஒட்டி ஒரு சில மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறையை தமிழக அரசு அறிவித்திருந்தது.
மேலும் கடலோர மாவட்டங்களிலும் இன்று அதிகாலை முதல் மிக கனமழையானது பெய்து வருகிறது. இந்த மழையானது வருகின்ற ஐந்தாம் தேதி வரை தொடரும் என்பதை சென்னை மண்டல வானிலை மண்டல ஆய்வு மையம் மற்றும் இந்திய மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையை பொருத்தமட்டில் காலை முதல் மீனம்பாக்கம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மாம்பழம், தாம்பரத்தை ஒட்டிய பல பகுதிகளில் தொடர்ந்து கனமழையானது பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமுத்துடன் காணப்படும் என்று நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.