Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: 12ஆம் தேதி வரை எச்சரிக்கை…! மீனவர்களுக்கு முக்கிய அலெர்ட்… சென்னை வானிலை ஆய்வு மையம் …!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரை வரும் நவம்பர் 12ஆம் தேதி வரை குமரிக்கடல்,  மன்னார்வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள்,  தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகள்,  தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்றானது  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இந்த பகுதிகளில் பலத்த காற்றுடன் மழையும் பெய்யக்கூடும். எனவே மீனவர்கள் 12ஆம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை மற்றும் புற நகரை பொறுத்தவரை 10ஆம்  தேதி ஒரு சில பகுதிகளில் கனமழையும்,  11,  12 தேதிகளில் ஒரு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழையும்,  13ஆம் தேதி ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவித்தார்.

Categories

Tech |