ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
ஒசாமா பின்லேடனை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் பின்லேடன் பிரபல பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் தலைவனாவான். பின்லேடன் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் உட்பட பல்வேறு பயங்கரவாத செயலில் ஈடுபட்டு அட்டூழியம் செய்து வந்துள்ளான். இதையடுத்து அமெரிக்க கடற்படை கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானின் அபோடாபாத்தில் வைத்து அவரை சுட்டுக் கொன்றது.
இதையடுத்து அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு முடிந்துவிட்டது என்று நினைக்க அவரது மகன் ஹம்சா பின்லேடன் அந்த அமைப்பை வழி நடத்துவதாக கூறப்பட்டது.29 வயதான ஹம்சா பின்லேடன் ஒசாமா பின்லேடனின் 3 மனைவிகளுள் ஒருவரின் மகன். அமெரிக்கா 2017-ம் ஆண்டு இவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது. ஹம்சா பின்லேடன் மறைந்திருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவித்தால் 10,00,000 டாலர் பரிசு வழங்குவதாக அறிவித்தது.
மேலும் ஹம்சா பின்லேடனை தீவிரமாக தேடிக்கொண்டு இருந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியது ஆனால் எவ்வித அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.இந்நிலையில் அல்கொய்தா அமைப்பின் தலைவர் பில்லேடனின் மகன் ஹம்ஷா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தற்போது உறுதிபட தெரிவித்துள்ளார்.