Categories
மாநில செய்திகள்

#BREAKING: சி.விஜயபாஸ்கர் FIRஇல் இருப்பது என்ன ? பரபரப்பு தகவல் …!!

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்பாக பதிவாகியுள்ள FIRஇல் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில்  உள்ள தனியார் கல்லூரிக்கு கொடுக்கக்கூடிய ஒரு சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு என புகார்.

மெடிக்கல் காலேஜ் தொடங்குவதற்கு உண்டான எல்லாவிதமான  கட்டமைப்பு வசதிகளும் இருக்க வேண்டும். அது இல்லாம அனுமதி கொடுக்கக் கூடாது என சட்டவிதி உள்ளது. ஆனால் அனுமதி வழங்கியதில் எந்த ஒரு சட்டவிதியும் பின்பற்றவில்லை. நேஷனல் மெடிக்கல் கமிஷன் சட்டப்படி தான் புதிதாக  மெடிக்கல் காலேஜ் ஆரம்பிக்க முடியும்.

ஆனால் ஊத்துக்கோட்டையில் இருக்கின்ற தனியார் கல்லூரியில் எந்தவித அடிப்படைகட்டமைப்பு வசதி  இல்லமால் முறைகேடாக அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. முறைகேடாக சான்றிதழ் கொடுத்தது தவறு என சுட்டிக்காட்டி முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |