முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் முதல் தகவல் அறிக்கையில் (எஃப் ஐஆர்) இப்போது தமிழக சட்டசபையின் சபாநாயகராக இருக்கின்ற அப்பாவு முன்னாள் ராதாபுரம் எம்எல்ஏவாக இருந்தபோது 2புகார் கொடுத்துள்ளார். அந்த பெட்டிஷன்ல என்ன சொல்றாரு ? என்றால்,
சேலம், தர்மபுரி, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி இந்த மாவட்டங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்லாம் LED லைட்களாக மாற்றுவதற்கு அப்போதைய அதிமுக அரசு முடிவெடுத்தது. இதற்காக டெண்டர் விசடப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் கலந்துகொண்டவர்களில் முக்காவாசி பேர் பொய்யாக இருக்கிறார்கள், அவர்கள் யாரும் உண்மையான சப்ளையர்ஸ்சே கிடையாது.
அவங்க கிட்ட எந்த வித எக்ஸ்பீரியன்ஸ் கிடையாது. இவர்கள் எல்லாருமே எஸ்.வேலுமணி உடைய பினாமி என்று சொல்றாங்க. 2015 – 16, 17, 18 இந்த மூன்று வருடத்திலும் எல்இடி லைட்டை மார்க்கெட் ரேட் க்கு மேல நிறைய விலை வச்சு வாங்கி இருக்காங்க. அதனால 500 கோடி ரூபாய் வரைக்கும் அரசுக்கு இழப்பு ஏற்ப்பட்டு இருக்கும் அப்படின்னு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி FIRஇல் குறிப்பிட்டுள்ளார்கள்.