Categories
Uncategorized மாநில செய்திகள்

BREAKING: 2ஆவது பிரேதபரிசோதனை அறிக்கையில் உள்ளது என்ன ? வெளியான பரபரப்பு தகவல் ..!!

கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி இறக்கவில்லை,  கொல்லப்பட்டார் என்று அவருடைய தாயார் மற்றும் அவரது உறவினர்கள் தரப்பில் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.  மாணவி தற்கொலை செய்து கொண்டார் என பள்ளி தரப்பிலும் சொல்லப்பட்டு வந்தது. இதற்கான ஆதாரமாக சிசிடிவி காட்சிகளை எல்லாம் அவர்கள் வெளியிட்டிருந்தனர்.

தொடர்ந்து என்ன நடந்திருக்கிறது ? என்பது தொடர்பாக  சிபிசிஐடி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணை தீவிர படுத்தப்பட்டிருக்கிறது. மாணவியின்  முதல் உடற்கூறாய்வில் பெற்றோர் சந்தேகம் இருப்பதாக கூறியதை தொடர்ந்து இரண்டாவது பிரேதபரிசோதனையும் நடைபெற்றது. இரண்டாவது பிரேத பரிசோதனையிலும் அவர்களுக்கு சந்தேகம் வந்ததால்,  முதல் மற்றும்  இரண்டு பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டுகளும் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து அங்கும் ஆய்வு செய்து அந்த அறிக்கையானது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அந்த அறிக்கை இன்னமும் மாணவியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்களுக்கு கொடுக்கப்படவில்லை. இரண்டாவது பிரேதபரிசோதனை அறிக்கையானது அவரது உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்திருக்கிறது. மாணவியின் இரண்டாவது பிரேதபரிசோதனை அறிக்கையும்,  முதல் பிரேதபரிசோதனை அறிக்கையிலும் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக தற்போது சொல்லப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் முன்னதாக மாணவியின் இடுப்பு எலும்பு முறிந்து இருந்ததாக தற்போது இரண்டாவது பிரேதபரிசோதனையில் தகவல் வெளியாகியிருக்கிறது.

நெஞ்சு எலும்பில் ஏற்பட்ட காயமும் இரண்டாவது பிரேத பரிசோதனையில் தெரிய வந்திருப்பதாக புதிய தகவல் கிடைத்திருக்கிறது. மாணவி தரப்பில் அவர்  கொல்லப்பட்டார் என்பதற்கான ஆதாரங்கள் இந்த இரண்டாவது பிரேத பரிசோதனையில் இருப்பதாக அவர் தரப்பில் குறிப்பிட்டு வருகிறார்கள். உடலில் பல்வேறு இடங்களில் ரத்தக்கட்டு இருப்பது போன்ற காயங்கள் இருப்பதாகவும், அவரது இடது மார்பு பகுதிகளில் ஒரு சிறிய காயம் இருப்பதாகவும் 2ஆவது பிரேதபரிசோதனையில் புதிய தகவலாக கிடைத்திருக்கிறது.

இதன் அடிப்படையில் மாணவிக்கு என்ன நடந்திருக்கும் ? என்பது தொடர்பாக தொடர்ந்து சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தான்,  பல்வேறு அடுத்த அடுத்த கட்ட நகர்வுகளாக இந்த சம்பவம் சென்று கொண்டு இருக்கின்றது. இதன் அடிப்படையில் தான் முதலாவது பிரேதபரிசோதனை ரிப்போர்ட்டுக்கும்,  இரண்டாவது பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டுக்கும்  பல்வேறு முரண்பாடுகள் இருப்பதை  அவரது உறவினர் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

2ஆவது பிரேதபரிசோதனையில் இருக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் வெளிவந்திருக்கின்றது. ஜிப்மர் மருத்துவமனை அறிக்கையில் என்ன தகவல் இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை இந்த இரண்டு அறிக்கைகளையும் ஒப்பிட்டு, ஏதேனும் காயங்கள் இருக்கிறதா ? அல்லது தற்கொலைக்கான ஏதேனும் தடயங்கள் இருக்கிறதா அல்லது கொலை செய்யப்பட்டதற்கான ஏதேனும் தடயங்கள் இருக்கிறதா ?

என்பதெல்லாம் அந்த ஜிப்மர் மருத்துவ அறிக்கையில் இருக்கும் என்று அவரது வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்கள் நம்புகிறார்கள். இருப்பினும் மாணவி மரண விவகாரத்தில் என்ன நடந்தது ? என்பது சிபிசிஐடி  முழுமையாக விசாரணை முடிந்த பின்னர் தான் நமக்கு முழுமையாக தெரியும்.

Categories

Tech |