மக்கள் நீதி மையத் தலைவரும், நடிகருமான கமலஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காய்ச்சல், சளி, இருமல், பிரச்சனை காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். நேற்றைய தினம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் கமல் டிசார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை வட்டாரமானது தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக மருத்துவமனையே செய்தியை குறிப்பை வெளியிட்டுள்ளது.
Categories