Categories
மாநில செய்திகள்

#BREAKING: அதிமுக சாவி யாருக்கு ? ஓபிஎஸ் மனு தள்ளுபடி…! கலக்கிய எடப்பாடி… நீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கில் பன்னீர் செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுகவின் தலைமை அலுவலக சாவியை இடைக்கால பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களிடம் ஒப்படைத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து  உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நிதி அரசர் சந்திர சூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சார்பில் ஒரு பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த பதில் மனுவில், ஓ. பன்னீர் செல்வம் கட்சியினுடைய அடிப்படை உறுப்பினர் இல்லாத போது அதிமுக உடைய அதிகார உரிமையை கோர முடியாது எனவும்,  கட்சியினுடைய தலைமை அலுவலகத்தினுடைய சாவியை தன்னிடம் ஒப்படைக்க கூறுவதற்கு பன்னீர் செல்வத்திற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்று பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பன்னீர்செல்வம் கட்சியின் பல விவகாரங்களில் கையாடல் நடத்தியுள்ளார் என்பதால், கையாடல் நடத்தியவர்களிடம் கட்சியின் அலுவலக சாவியை ஒப்படைக்க கூடாது,  ஒப்படைக்கவும் முடியாது என இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அதிமுகவினுடைய அலுவலகத்திற்குள் பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளருடன் வன்முறையில் ஈடுபட்டுள்ளார் எனவும்,  பொருட்களை சேதப்படுத்தி உள்ளார் எனவும்,  இவ்வாறு கட்சிக்கு எதிராக நடக்கக்கூடிய ஒருவர் அலுவலக நிர்வாக உரிமையை கோர முடியாது எனவும்,

பன்னீர்செல்வத்தின் அதிமுக அலுவலக சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதில், பன்னீர் செல்வத்திற்கு பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றத்தினுடைய நீதி அரசர்கள் சந்திர சூட் எழுப்பியிருந்தார். அப்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர்,

அவர் அதிமுகவினுடைய தலைமை அலுவலகத்திற்கு எப்படி உரிமை கோருகிறார் என்ற கேள்வியை பன்னீர்செல்வம் தரப்புக்கு எழுப்பினார்கள். மேலும் பன்னீர்செல்வம் தரப்பிற்கு, நீங்கள் வேண்டுமென்றால் சிவில் வழக்கு வழக்கு தாக்கல் செய்து,  அலுவலகத்தை மீட்க சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மனுவையும் தற்போது உச்ச நீதிமன்றத்தின் உடைய நீதியரசர் தள்ளுபடி செய்து உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்கள். இந்த உத்தரவு ஓபிஎஸ்சுக்கு பெரும் பின்னடைவையும், ஈபிஎஸ்சுக்கு பெரும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.

Categories

Tech |