Categories
Uncategorized மாநில செய்திகள்

Breaking: மின்கட்டண உயர்வு ஏன் – தமிழக மின்துறை விளக்கம் …!!

மார்ச் 31 வரை தமிழக மின்சாரத் துறை கடன் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாயாக இருப்பதாக மின்கட்டண உயர்வுக்கு அரசு கொடுத்த விளக்கத்தில் தெரிவித்து இருக்கிறது.

தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்வு என்பது இன்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், என பலரும் இந்த கட்டண உயர்வுக்கு கட்டணம் தெரிவித்து கொள்கிறார்கள். தமிழக மக்கள் அதிர்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வரக்கூடிய நிலையில், தமிழக அரசு குறிப்பாக மின்சார துறை இதற்கான விளக்கத்தினை தற்போது கொடுத்திருக்கின்றது.

இந்த கட்டண உயர்வு ஏன் செய்யப்பட்டது ? தமிழக அரசே இந்த மின்சாரத்தினுடைய கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏன் ? வந்தது என்ற விளக்கத்தை  செய்தி குறிப்பின் வாயிலாக கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டுமொத்த நிதி இழப்பானது கடந்த மார்ச் மாதம் வரை என்று பார்க்கும்போது,  ஒரு லட்சத்தி 13 ஆயிரத்து 266   கோடியாக உயர்ந்திருக்கிறது. மேலும் அதே தேதியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தினுடைய மொத்த கடன் நிலுவைத் தொகை என்று பார்க்கும்போது,  ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடியாக இருக்கிறது.

இதன் விளைவாக கடன் வாங்கிய நிதிகளுக்கான வட்டி சுமார் 260 சதவீதம் வரை அதிகரித்து,  வருடத்திற்கு 16,511 கோடியாக உயர்ந்திருக்கிறது. ஒவ்வொரு மாதமும் நாம் வாங்கி இருக்க கூடிய கடனுக்கான வட்டி என்பது ஆண்டுக்கு சுமார் 17,000 கோடி வட்டி மட்டும் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது. சுமார் 1,60,000 கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இவ்வளவு பெரிய கடன் சுமை இருக்கக்கூடிய காரணத்தால் தான், அதனை சமாளிப்பதற்காக இந்த மின்சார கட்டணத்தினுடைய உயர்வு என்பது வேறு வழி இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது என என தமிழக அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது

Categories

Tech |