தமிழகத்தில் கொரோனா தாக்கத்தால் 8ஆம் வகுப்பு வரை தேர்ச்சி வழங்கப்பட ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நேற்றைக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதி ஆண்டு தேர்வினை ரத்து செய்துவிட்டு, நேரடி தேர்ச்சி என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள். இதே போல ஒரு கோரிக்கை தமிழகத்திலும் எழுந்துள்ளது. ஆசிரியர்கள் , பெற்றோர்கள் இதற்கான கோரிக்கையை முன்வைத்து வந்தனர். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8ஆம் வகுப்பு வரைக்கும் தேர்வு வைக்காமல் தேர்ச்சி கொடுக்கலாமா ? என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் , தமிழக அரசுடன் ஆலோசனை மேற்கொண்டு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வரை கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தேர்ச்சி வழங்க வேண்டும் என்று சட்டம் நடைமுறையில் இருக்கின்றது. இந்த நிலையில் கொரோனா போன்ற அசாதாரண நிலையில் 8ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வை ரத்து செய்துவிட்டு நேரடியாகவே தேர்ச்சி வழங்கலாம் என்ற ஆலோசனையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றார்கள்.விரைவில் 30ஆம் தேதிக்கு பின் தேர்வு நடக்குமா ? அல்ல எல்லாரும் தேர்ச்சியா என்ற அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.