அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்த உடன் அம்மா மினி கிளினிக் சுவர் இடிந்து விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் அடிப்படை மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் ஏற்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதில் 1 மருத்துவர், 1 செவிலியர், 1 சுகாதாரப் பணியாளர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்றவை இடம் பெற்றிருக்கும். இந்நிலையில் கரூர் குளித்தலையில் அம்மா மினி கிளினிக் கட்டடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் திறந்து வைத்துள்ளார்.
அப்போது அந்த கிளினிக்கின் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் இரண்டு குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் பொது மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.