தமிழக அமைச்சரவையானது விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த 18 மாதங்களுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையானது தற்பொழுது விரிவாக்கமானது செய்யப்பட்டிருக்கிறது. இளைஞர் நலத்துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார் உதயநிதி ஸ்டாலின். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக உதயநிதி செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் 34 அமைச்சர்களை கொண்ட தமிழக அமைச்சரவை ஆனது தற்போது 35 ஆக உயர்ந்துள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இளைஞர்கள் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக உதயநிதிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருக்கக்கூடிய இரண்டாவது மாடியிலே அவருக்கென்று பிரத்தியேகமாக அறை ஒதுக்கப்பட்டு இருக்கக்கூடிய சூழ்நிலையில் அவருடைய துறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.ஏற்கனவே அமைச்சர் மெய்யனாதன் கூடுதலாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக செயல்பட்டு வந்த நிலையில் அவருக்கு சுற்றுச்சூழல் துறை போன்ற துறை பொறுப்புகள் இருக்கின்றது.