தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் மேல்நிலை கல்வி பயின்ற பள்ளி மாணவர்களுக்கான, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை செப்டம்பர் 17ஆம் தேதி முதல் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி யிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள பள்ளிக்கு வரும் தேர்வர்கள் மற்றும் பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். பள்ளியில் தேர்வர்கள்/பெற்றோர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Categories