தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12 நாட்கள் மட்டுமே விடுமுறை என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “11ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 12 நாட்கள் மட்டும் விடுமுறை அளிக்கப்படும். 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், ஜூன் 24ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5-ஆம் தேதி முதல் 28ம் வரை நடக்கும், பதினோராம் வகுப்பு தேர்வு மே 9-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடக்கும். பத்தாம் வகுப்பு தேர்வு மே 6-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.