Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் நீலகிரி பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING NEWS: தமிழகத்தில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோவை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. நீலகிரி,  கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 13 சென்டிமீட்டர், கடலூர்,  தேவாலாவில் தலா 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ள பதிவாகி இருப்பதாக கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம்,  சென்னையில் இரண்டு நாட்களுக்கு மேகம் வானமேகமுத்துடன் காணப்படும்,  சில இடங்களில் லேசான மழை பெய்யும்  என்றும் கூறி உள்ளது.

Categories

Tech |