உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முழுமையான முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்குள் வெளியாகும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடந்து முடிந்தது.. இதனை தொடர்ந்து நேற்று முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது.. முடிவுகள் முழுமையாக எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளது.
அதாவது, ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முழுமையான முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்குள் வெளியாகும் என்று மாநில தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை 98 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
9 மாவட்டங்களில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.. இரண்டாவது நாளாக வாக்கு எண்ணிக்கை நீடிக்கும் நிலையில், மாநில தேர்தல் ஆணையம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.. இதன் காரணமாக இன்று மதியம் 2 மணிக்குள் முழுமையான தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்பது தெளிவாகிறது.