உலக அளவில் பொதுவாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த புற்று நோய் குறிப்பாக 30 வயதை கடந்த பெண்களுக்குத்தான் அதிக அளவில் ஏற்படும் என்று கூறப்படுவதால் பெண்கள் வருடம் தோறும் முறையாக மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அதன் பிறகு சிறிய வயதில் வயதுக்கு வருவது மற்றும் 50 வயதுக்கு மேல் ஆகியும் மாதவிடாய் நிற்காமல் தொடர்ந்து வருவது, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது போன்றவைகளாலும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இந்நிலையில் பெண்களுக்கு மட்டும் தான் மார்பக புற்றுநோய் அதிக அளவில் வரும் என்று கூறப்படும் நிலையில் ஆண்களுக்கும் புற்று வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.
புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கும் ஆண்களுக்கு தான் 15 சதவீதம் அளவுக்கு மார்பக புற்று நோய் வருமாம். மோனோகிராபி டெஸ்ட் எடுத்து கொண்டால் அதன் மூலம் புற்றுநோய் இருக்கிறதா என்பது தெரிய வந்து விடும். ஏனெனில் மோனோகிராபி டெஸ்ட் மூலமாக உடலில் இருக்கும் சிறு கட்டிகள், தழும்புகள் கூட துல்லியமாக தெரியும் என்பதால் மோனோகிராபி டெஸ்ட் மார்பக புற்று நோய் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்கு சரியான தேர்வாக இருக்கும். இதனையடுத்து மரபு வழியிலும் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் பெண்கள் தங்களுடைய மார்பகங்களில் ஏதாவது வித்தியாசம் தெரிந்தாலும் உடம்பில் ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகி தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
மார்பகங்களில் தோன்றும் சிறிய கட்டிகள், நீர்க்கசிவு, இரத்த கசிவு போன்றவைகள் மார்பக புற்றுநோய் காண அறிகுறிகளாக கூறப்படுகிறது. எனவே இது போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டுமே தவிர வேறு யார் பேச்சையும் கேட்டு காலதாமதம் செய்து சிகிச்சைக்கு தாமதப்படுத்தக் கூடாது. பெண்களிடம் மார்பகப் புற்றுநோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் இறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்க நாட்டில் உள்ள பெரும்பாலான பெண்களிடம் மார்பக புற்றுநோய் குறித்த உரிய விழிப்புணர்வு இருப்பதன் காரணமாக அவர்கள் உரிய முறையில் சிகிச்சை மேற்கொண்டு ஆரம்பத்திலேயே அதை சரி செய்து விடுகிறார்கள்.
அதோடு தேவைப்பட்டால் மார்பகங்களையும் நீக்கி தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்கிறார்கள். இதனால்தான் அமெரிக்காவில் மார்பக புற்று நோயால் இறக்கும் பெண்களின் விகிதம் குறைவாக இருக்கிறது. அதன் பிறகு தினந்தோறும் சூரிய ஒளியில் நிற்பதன் மூலமாகவும் மார்பக புற்று நோயிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என கனடா நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடித்து கூறியுள்ளனர். மேலும் தினந்தோறும் சூரிய ஒளியில் 15 முதல் அரை மணி நேரம் வரை நின்று மார்பக புற்றுநோய் பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். எனவே மார்பக புற்றுநோய் குறித்த உரிய விழிப்புணர்வை பெண்கள் ஏற்படுத்திக் கொண்டு ஆரம்ப காலத்திலேயே அதை கண்டுபிடித்து உரிய முறையில் சிகிச்சை மேற்கொண்டால் இறப்பிலிருந்து தப்பிக்கலாம்.