தாய் ஒருவர் தனது குழந்தைகளின் நஞ்சுக்கொடியை வாங்கி சமைத்து சாப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நஞ்சுக்கொடி என்பது ஒரு தற்காலிக உடல் உறுப்பு தான். இது குழந்தை வயிற்றில் உருவாகும் போது குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச் சத்துக்களை கொடுப்பதற்காக இது உருவாகிறது. மேலும் குழந்தையின் ரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. இந்த உடலுறுப்பை ஒரு தாயார் சமைத்து உண்ண ஆசைப்பட்டுள்ளார். ஆம். கேம்பிரிட்ஜ் நாட்டை சேர்ந்த கெத்ரினா ஹில் என்பவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அவர் தனது குழந்தையின் நஞ்சுக்கொடியை மருத்துவமனையில் கேட்டு வாங்கியுள்ளார். பின்னர் அதைக் கொண்டு புரிட்டோ என்னும் உணவை சமைத்து சாப்பிட்டுள்ளார்.
இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தன்னுடைய முதல் குழந்தையின் நஞ்சுக்கொடியை 2016 ஆம் வருடம் காப்சூல் என்ன மாத்திரை வடிவில் சாப்பிட ஆசைப்பட்டு உள்ளார். இதையடுத்து இரண்டாவது குழந்தை பிறந்த தருணத்தில் இப்போது ஒரு உணவாக சமைத்து சாப்பிட்டுள்ளார். தன்னுடைய முதல் முயற்சியான இவர் இந்த நஞ்சு கொடியுடன் மூலம் மிளகாயை சேர்த்து சாப்பிட்டுள்ளார். உணவாக சமைக்கும் வரை இந்த நஞ்சுக்கொடியை ப்ரீசரில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நஞ்சுக்கொடி குறித்த நிறைய ஆராய்ச்சிகளை படித்தேன்.
ஆனால் அவற்றை எங்கும் வாங்க முடியாது. ஆனால் அது குறித்து நான் ஆராய்ச்சி செய்ய முடிவு செய்த போது சில விஷயங்கள் எனக்குத் தெரிந்தது. இது பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் மனச்சோர்வை குறைக்கிறது. பால் உற்பத்திக்கும் உதவுகிறது. இதனால் என்னுடைய குழந்தைகள் சரியான அளவு தாய்ப்பால் கொடுக்க முடிந்தது. நஞ்சுக்கொடி சாப்பிட நன்றாக இருந்தது என்று கூறியுள்ளார். இதில் நன்மைகள் இருந்தாலும் ஆபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது உடலுறுப்பு என்பதை தாண்டி அருவருக்கத்தக்க விஷயமாகும் பார்ப்பதுண்டு. எனவே இது அனைவராலும் வியக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகின்றது.