ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே பிரெக்ஸிட் ஒப்பந்தம் உடன்பாடு ஏற்பட்டதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடித்து இருக்க வேண்டுமா , நீடித்து இருக்க கூடாதா , தனித்து விளங்க வேண்டுமா என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட அந்த வாக்கெடுப்பில் பிரிட்டன் மக்கள் விலகுவது என தீர்ப்பளித்தார்கள். பின்னர் அதிலிருந்து எப்போது , எப்படி , எந்த உடன்பாட்டின் அடிப்படையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என்பதில் தொடர்ச்சியாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் , பிரிட்டனுக்கு பல்வேறு விஷயங்களில் வேறுபாடு இருந்து வந்தது.
இது தொடர்பாக ஆளும் கட்சிக்கு உள்ளேயே பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தன. ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி இந்த உடன்பாட்டை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்த்தாலும் கூட அந்த உடன்பாட்டில் எந்தெந்த பிரச்சினைகளுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் , எந்த விதத்தில் , எப்படி அணுக வேண்டும் என்பது உட்பட தொடர்ச்சியாகப் கருத்து வேறுபாடுகள் கட்சிக்குள்ளே இருந்த MP_க்களுக்கிடையே இடையே நீடித்து வந்தது.
ஒரு தருணத்தில் இதனால் அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் தெரசாமே பதவி விலக நேர்ந்தது. அவரால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்த உடன்பாட்டுக்கு ஆதரவு திரட்ட முடியவில்லை. இதனால் அவரால் பதவியில் நீடித்து இருக்க முடியவில்லை.இப்படி ஒரு தருணத்தில்தான் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவி ஏற்றார். இவராலும் MP_க்களிடையே பேசி உடன்பாட்டுக்கு ஒப்புதல் பெற முடியாத சூழ்நிலை இருந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டடுள்ளது என்றும் ,பிரசல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடந்த பேச்சில் தற்போது உடன்பாடு ஏற்பட்டது பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பாக நீண்ட காலமாக இழுபறி நீடித்த நிலையில் தரோடு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது ட்வீட்_டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.