மின்வாரிய இன்ஜினியர் உள்பட 2 பேர் விவசாய மோட்டார் வைத்து மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூரில் கனகராஜ் என்ற விவசாய வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அங்கு உள்ள மின் மோட்டாருக்கு தட்கல் ஒதுக்கீடு முறையில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து அரசுக்கு செலுத்த வேண்டிய 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்திய பிறகும் இவர்களுடைய மின் மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து அவர் கேட்டபோது, மின்பாதை ஆய்வாளர் இளங்கோ என்ற வெங்கடாசலதிற்க்கும், மின்சார வாரிய இளநிலை என்ஜினீயர் ராஜேந்திரன் என்பவருக்கும் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என கூறியுள்ளனர்.
இதனை அடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத கனகராஜ் கோவை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல் துறையினரின் அறிவுரைப்படி ரசாயன பவுடர் தடவிய 15 ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகளை கனகராஜ் ராஜேந்திரன் மற்றும் இளங்கோவிடம் கொடுத்த போது அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இருவரையும் கையும் களவுமாக பிடித்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.