Categories
மாநில செய்திகள்

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம்… மத்திய அரசின் பதிலுக்காக காத்திருப்பு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையத்தை இயக்குவதற்காக மத்திய அரசின் அனுமதியை எதிர்நோக்கி காத்திருப்பதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 298 நியாய விலை ஊழியர்கள் மட்டும் பெட்ரோல் நிலைய ஊழியர்களுக்கு  தடுப்பூசி செலுத்தும் முகாமை தொழில்துறை அமைச்சர் தென்னரசு தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் நெல்லை மாவட்டத்தில் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 சதவீதம் குறைந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து செங்கல்பட்டு கொரோனா தடுப்பூசி மையத்தை தமிழக அரசே ஏற்று நடத்தும் என்ற கோரிக்கையை ஸ்டாலின் பிரதமருக்கு கடிதமாக எழுதியுள்ளார். இந்நிலையில் 10 நாட்களில் மக்களுக்கு பதில் அளிப்பதாக கூறி உள்ளது. அவர்களின் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |