Categories
தேசிய செய்திகள்

பாஜக பிரமுகர் சுட்டு கொலை…பயங்கரவாதிகளை தேடி வரும் இந்திய ராணுவம்..!!

காஸ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டு கொலை செய்யப்பட்டார், பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் தேடி வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தின் பாஜக துணை தலைவரான  குல் முகமது மிர் நவ்காமில் வீரிநாக் பகுதியில் வசித்து வருபவர். இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டுக்கு சென்ற தீவிரவாதிகள் குல் முகமது மிரை இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றனர்.

Image result for சுட்டு கொலை

மேலும் இதை தொடர்ந்து பரிதாப நிலையில் கிடந்த முகமதை அவரது உறவினர்கள் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். முகமதை சுட்ட தீவிரவாதிகளை ராணுவம்  தேடிவருகிறது.   இவரை கொன்றுவிட்டு அங்கிருந்து அந்த தீவிரவாதிகள் தப்பிச்சென்றனர். இந்த கொடூர சம்பவத்திற்கு பல கட்சி தலைவர்க்கல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |