Categories
உலக செய்திகள்

திறப்பு விழாவிலேயே உடைந்து விழுந்த பாலம்… வெளியான அதிர்ச்சி வீடியோ..!!!

காங்கோ நாட்டில் ஆற்று பாலம் ஒன்றின் திறப்பு விழா நடந்து கொண்டிருந்த சமயத்தில், அந்த பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

காங்கோ நாட்டில் மழைக்காலங்களில் மக்கள் பாதுகாப்பான முறையில் ஆற்றை கடந்து செல்ல வேண்டும் என்பதற்காக புதிய ஆற்றுப்பாலம் ஒன்று கட்டப்பட்டது. அந்தப் பாலத்தை திறக்கும் விழா நடைபெற்ற போதே அந்த பாலம் இடிந்து விழுந்த அதிர்ச்சிகரமான வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

அதில் பாலத்தில் அதிகாரிகள் நின்று கொண்டிருக்கிறார்கள். அந்த பாலத்தை திறந்து வைக்க காத்திருக்கிறார்கள். அதன்பின்பு ஒரு பெண் அதிகாரி ரிப்பனை வெட்ட கத்திரிக்கோலை கொடுத்தவுடன் பாலம் இடிந்து விழுந்துவிட்டது. எனினும் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், அதிகாரிகள் கீழே விழாமல் பாதுகாப்பாக மீட்டிருக்கிறார்கள்.

Categories

Tech |