Categories
தேசிய செய்திகள்

மாலத்தீவில் பாலம் கட்டும் பணி… இந்தியா 3,750 கோடி நிதி உதவி… ஜெய்சங்கர் அறிவிப்பு…!!

மாலத்தீவில் பாலம் கட்டும் பணிக்கு இந்தியா ரூ.3 ஆயிரம் கோடி கடனாகவும், ரூ.750 கோடி மானியமாகவும் வழங்கும் என்று ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ‌ஷாகித்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின், மாலத்தீவில் 6.7 கி.மீ. தூர பிரமாண்ட பாலம் கட்டும் பணி திட்டத்துக்கு இந்தியா ரூ.3 ஆயிரம் கோடி கடனாகவும், ரூ.750 கோடி மானியமாகவும் வழங்கும் என்று ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.

தலைநகர் மாலே அருகில் இருக்கும் 4 தீவுகளுக்கு இந்த பாலம் இணைப்பு வசதியை கொடுக்கிறது. மேலும் மாலத்தீவு-இந்தியா இடையே உள்ள வழக்கமான கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் ஜெய்சங்கர் கூறியுள்ளார். மாலத்தீவுக்கு உணவு பொருட்கள், கட்டுமான பொருட்கள் வினியோகத்துக்கான ஒதுக்கீட்டை இந்தியா புதுப்பிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |