Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகம் வலுவலுப்பாக பளிச்சென்று மின்ன… வாழைப்பழ மசாஜ்.

முகம் பளபளவென்று மின்ன முற்றிலும் இயறக்கையான முறையில் வாழைப்பழ மசாஜ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..

காலநிலை மாற்றங்கள் முக சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணமாக  சரும வறட்சி, சரும உதிர்வு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு முக அழகு குறையும். இது போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பெரும்பாலானோர் கிரீம் வகைகளைபயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாழைப்பழத்தையும், பாலையும் மட்டும் பயன்படுத்தி முக அழகை  தக்க வைத்து கொள்ளலாம். இந்த இரண்டு பொருள்களும் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி புதிய முகப்பொலிவை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. வாழைப்பழம் மற்றும் பால் கலந்து பேஷியல் கிரீம் தயாரிப்பது எப்படி? என்று பார்ப்போம்.

 

Related image

தேவையான உபகரணங்கள்:

 

வாழைப்பழம்-4

பால்- 2 டம்ளர்.

Image result for வாழைப்பழ மசாஜ்

செய்முறை:

வாழைப்பழங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் வைத்து கொள்ள வேண்டும்.  ஒரு கிண்ணத்தில் நறுக்கிய வாழைப்பழ துண்டுகளை போட்டு நன்றாக பிசைய வேண்டும். பின்னர் ஒரு 1 டம்ளர் பாலை ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பின் அதனை கையில் எடுத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து சில மணி நேரம் உலரும் வரை காத்திருக்க வேண்டும். உலர்ந்த பின்  மிதமான சூட்டில் இருக்கக்கூடிய நீரில் முகத்தை கழுவி காட்டன் துணியால் முகத்தை துடைக்க வேண்டும். இந்த செய்முறையை வாரத்திற்கு 3 முறை தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளபளவென்று ஜொலிக்கும்.

Categories

Tech |