பார்ட்டிக்கு செல்வதற்காக இளம்பெண் தன்னுடைய 20 மாத கைக்குழந்தையை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிதானியா பகுதியில் வெர்பி குடி என்ற இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு அசிஹா என்ற 20 மாதக் கைக்குழந்தை ஒன்று இருந்தது. இவர் லண்டனில் இருக்கும் தனது நண்பருடைய பிறந்தநாள் பார்ட்டிக்கு செல்வதற்காக தன்னுடைய 20 மாத குழந்தையை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர் 6 நாட்கள் கழித்து வெர்பி தனது வீட்டிற்கு திரும்பிய போது அந்தக் குழந்தை பசியாலும் தாகத்தாலும் கதறித் துடித்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெர்பியை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் வெர்பி தனது குழந்தையை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு செல்வது இது முதல் முறை அல்ல என்றும் ஏற்கனவே 11 முறை இதுபோன்று அவர் செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் வெர்பிக்கு அடுத்த மாதம் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.