தேவையான பொருட்கள்
தக்காளி – 4
கத்தரிக்காய் – 1/4 கிலோ
வத்தல் – 10
கடுகு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 3 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 4
உப்பு – தேவையான அளவு
செய்முறை
- முதலில் கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம் மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
- கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி வத்தலை நன்றாக வறுக்கவும்.
- அதனுடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பின்னர் ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- இறுதியாக கடுகு தாளித்து சேர்த்து விட்டால் சுவைமிக்க கத்தரிக்காய் சட்னி தயார்.