Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாதத்திற்கு ஏற்ற…. காரசாரமான கத்தரிக்காய் குழம்பு…!!

கத்தரிக்காய் குழம்பு

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய்                         –   1/2 கிலோ

தக்காளி                                   –   2

நல்லெண்ணெய்                 –   1/2 கப்

புளி                                             –   எலுமிச்சைப்பழ அளவு

கடுகு                                         –   1/2 டீஸ்பூன்

வத்தல் பொடி                       –   4 டீஸ்பூன்

சின்ன வெங்காயம்           –   100 கிராம்

உப்பு                                          –   தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கத்திரிக்காயை நன்றாக கழுவி நீல நீலமாக நறுக்கி வைக்கவும்.
  • புளியை தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
  • அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு போடவும்.
  • கடுகு வெடித்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கி சிவந்து வருகையில் தக்காளியை சேர்த்து மேலும் வதக்கவும்.
  • பின்னர் அதனுடன் கத்தரிக்காய், வத்தல் பொடி, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • இறுதியாக கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி மூடி விடவும்.
  • ஒரு விசில் வரும் வரை காத்திருந்து பின்னர் இறக்கவும்.
  • காரசாரமான கத்தரிக்காய் குழம்பு தயார்.

மருத்துவ நன்மைகள்  

  • ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
  • உடலுக்கு வலிமை கொடுக்கும்.
  • சிறுநீரக கற்களை கரைக்கும்.
  • சளி பிரச்சனைக்கு மருந்தாகும்.
  • உடல் எடையை குறைக்கும்.
  • புற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |