பிரிட்டன் உள்துறை செயலர் ப்ரீத்தி பட்டேல், புலம்பெயர்ந்தவர்களுக்கு, புதிய நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் 2021 ஆம் வருடத்தில் குற்றங்களில் ஈடுபட்ட 900 க்கும் அதிகமான பிறநாட்டு நபர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரிட்டன் உள்துறை செயலர் ப்ரீத்தி பட்டேல் புலம்பெயர்ந்தவர்களுக்கு, நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்திருக்கிறார். ஏற்கனவே வரும் 2025 ஆம் வருடத்தில் விசாக்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அவை, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதன் குறிப்பிட்ட காலம் முடிவடைந்த பின்பு அவற்றை வைத்திருப்பவர்களுக்கு சலுகைகள், சேவைகள் கிடைக்காததோடு பணியாற்றவும் முடியாத நிலை ஏற்படும் என்று பிரிட்டன் தீர்மானித்திருக்கிறது. சட்டவிரோதமாக புலம்பெயர்பவர்களை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாக இத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
தற்போது பிரிட்டன் உள்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேல், பிற நாட்டு குற்றவாளிகளுக்கு electronical tag என்ற மின்னணு பட்டை அணியும் திட்டத்தை அறிமுகப்படுத்தப்போகிறார். அதாவது தண்டனை காலம் முடிந்த பிறகு குற்றவாளிகள் தப்பி செல்வதை இதன் மூலம் தடுத்துவிடலாம்.
மேலும் தற்போது அவர்கள் எந்த இடத்தில் உள்ளார்கள் என்பதை கண்காணிக்கவும், பயன்படுத்தலாம். சுமார் 900 வெளிநாட்டு குற்றவாளிகள் நாடுகடத்தப்பட்டும், அதில் பல நபர்கள், அவர்களது நாட்டிற்கு திரும்பாமல் பிரிட்டனிலேயே வசித்து வருவதால் சட்ட சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே இத்திட்டம் கொண்டுவரப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.