Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் நிலை தொடர்பில் விவாதம்.. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் முக்கிய முடிவு..!!

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தான் நாடு குறித்து முக்கிய நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது.

அமெரிக்கா திடீரென்று தன் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப்பெற தீர்மானித்தது. எனினும் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற பல நாடுகளுக்கு அந்த தீர்மானத்தில் சம்மதமில்லை. அமெரிக்கா திடீரென்று தன் படைகளை திரும்பப்பெற தொடங்கியது தான் தலிபான்களுக்கு நாட்டை கைப்பற்ற முக்கிய காரணமாக அமைந்து விட்டது.

ஆனால், இதனை இப்படியே விட முடியாது என்று முடிவெடுத்த பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் இன்று ஐக்கிய நாடுகள் சபையுடன் ஒரு சந்திப்பிற்கு திட்டமிட்டிருக்கிறது. அதில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் மனிதநேய செயல்பாடுகளை தொடர்ச்சியாக செயல்படுத்த உதவும் விதமாக ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ், ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தவுள்ளதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்திருக்கிறார்.

இம்மானுவேல் மக்ரோன், இது மிகவும் முக்கியமானது, ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், ஐக்கிய நாடுகள் சபை உடனே செயல்பட இது வாய்ப்பாக அமையும் என்று கூறியிருக்கிறார். மேலும், ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலை தொடர்பில் விவாதிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் கவுன்சிலின் நிரந்தரமான உறுப்பு நாடுகளாக இருக்கும், பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா போன்ற நாடுகள் இன்று சந்திப்பு நடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |