பிரிட்டன் அரசு, கடந்த புதன்கிழமை அன்று பயணக்கட்டுப்பாடுகளில் மாற்றம் கொண்டு வந்ததால் பிற நாட்டில் மாட்டிக்கொண்ட பிரிட்டன் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா அச்சம் காரணமாக பயண விதிகள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. இதில் பிரிட்டன் அரசு, கடந்த புதன்கிழமை அன்று சிவப்பு பட்டியலில் இருக்கும் நாடுகளை அம்பர் பட்டியலுக்கு மாற்றியது. மேலும் மயோட், ஜார்ஜியா, பிரான்ஸ் யூனியன் மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளை சிவப்பு பட்டியலில் இணைத்தது.
இந்த நாடுகளிலிருந்து, பிரிட்டன் திரும்பும் மக்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதற்கான, பணத்தை பயணிகள் தான் கொடுக்க வேண்டும். மெக்சிகோ, தற்போது சிவப்பு பட்டியலில் இருப்பதால், அங்கு இருக்கும் 6000-த்திற்கும் அதிகமான பிரிட்டன் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
இந்நிலையில், அங்கு சென்றிருக்கும் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் விடுமுறையை கொண்டாட சென்ற சமயத்தில், இந்த அறிவிப்பு வெளியானது, வேதனையளிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். அதாவது, இவர்கள் பிரிட்டன் திரும்பும் பட்சத்தில் ஓட்டலில் தனிமைப்படுத்த 5000 பவுண்ட்கள் செலுத்த வேண்டியிருக்கும். எனவே இதனை தவிர்க்க, பயண கட்டுப்பாடுகள் மாற்றப்படும் வரை, அங்கேயே தங்க திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளனர்.
மேலும் பலரும் இது போல் மாட்டிக்கொண்டனர். எனவே பிரதமர் போரிஸ் ஜோன்சனும், இங்கிலாந்து போக்குவரத்து செயலாளரும், பயண கட்டுப்பாடுகளை மாற்றுவது தொடர்பில் ஆலோசனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.