பிரிட்டனில் ஒரு தம்பதி, பயங்கரவாத எண்ணம் உடையவர் தங்களுடன் வசித்து வந்ததை அறியாமல் இருந்து விட்டோமே என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள்.
பிரிட்டனில் உள்ள லிவர்பூல் நகரில் இருக்கும் மகளிர் மருத்துவமனைக்கு அருகில் ஒருவர் தற்கொலை தாக்குதல் நடத்த முயன்று, பலியானார். அந்த பயங்கரவாதி ஒரு வாகனத்தில் பயணித்திருக்கிறார். அந்த வாகனத்தின் ஓட்டுநரான டேவிட் பெர்ரி என்பவர், அந்த நபரின் ஆடையில் சிறிய மின் விளக்கு ஒளிர்வதை பார்த்திருக்கிறார்.
எனவே, அது வெடிகுண்டாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அவர் உடனடியாக அந்த நபரை தப்பிக்க விடாமல் வாகனத்திற்குள் பூட்டி வைத்துவிட்டு அதிலிருந்து வெளியேற முயன்ற சமயத்தில் குண்டு வெடித்து விட்டது. ஓட்டுனர் டேவிட் காயங்களுடன் உயிர் பிழைத்து விட்டார். பயங்கரவாதி பலியானார்.
இந்நிலையில், தற்கொலை தாக்குதல் நடத்த முயன்ற அந்த நபரின் பெயர் Emad Jamil Al Swealmeen என்று தெரியவந்திருக்கிறது. மேலும் அவர் லிவர்பூல் நகரில் Malcolm-Elizabeth Hitchcott என்ற தம்பதியரின் குடியிருப்பில் அவர்களோடு சேர்ந்து வசித்து வந்ததும் தெரியவந்தது. Emad , கடந்த 2015 ஆம் வருடத்தில் புகலிட கோரிக்கையாளராக வந்திருக்கிறார்.
அதன்பின்பு, தன் பெயர் Enzo Almeni, என்று கூறி அந்த தம்பதியிடம் அறிமுகமாகியிருக்கிறார். மேலும், அவர் தாக்குதல் நடத்த குறிவைத்திருந்த தேவாலயத்தில் தான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருக்கிறார். தற்போது அந்த தேவாலயத்திற்கு சென்று கொண்டிருந்த சமயத்தில் வழிப்பாதையில் சாலைகளில் நிறைய தடுப்புகள் வைக்கப்பட்டிருந்துள்ளது.
எனவே தனது திட்டத்தை மாற்றி மகளிர் மருத்துவமனையில் தாக்குதல் நடத்த முயற்சித்திருக்கிறார். இந்நிலையில், அவரை தங்களுடன் வசிக்க அனுமதித்த அந்த தம்பதி, “எங்களுடன் 8 மாத காலங்களாக வசித்துவந்த அன்பு மிகுந்த நபர், லிவர்பூல் நகரில் குண்டு வெடிப்பு தாக்குதலின் பின்னணியில் இருக்கிறார் என்று அறிந்தவுடன் அதிர்ச்சியடைந்தோம்.
அவர் இவ்வாறு செய்ததாய் எங்களால் நம்ப முடியவில்லை. அவர் பயங்கரவாத எண்ணங்களை கொண்டிருக்கிறார் என்று சிறிய அளவில் கூட எங்களுக்கு தோன்றவில்லை. அதற்கான அறிகுறிகளும் அவரிடம் இல்லை. பயங்கரவாத எண்ணமுடையவர் எங்களோடு வசித்திருக்கிறார் என்பதை அறியாமல் விட்டுவிட்டோமே” என்று வருத்தம் கூறியுள்ளனர்.