பிரிட்டன் அரசு, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனை விடுத்தது ஐரோப்பிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
பிரான்ஸ் அரசு, புலம்பெயர்தல் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு, பிரிட்டனின் உள்துறை செயலரான ப்ரீத்தி பட்டேலுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதனை திடீரென்று பிரான்ஸ் ரத்து செய்துவிட்டது. பிரிட்டன் அரசை, புறக்கணித்ததாக பிரான்ஸ் நினைத்த சமயத்தில், ப்ரீத்தி பட்டேல் பிரான்சை விட்டுவிட்டு ஐரோப்பிய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும், நெதர்லாந்து நாட்டின் புலம்பெயர்தல் துறைக்கான அமைச்சர் Ankie Broekers-Knol-உடன் பேச்சுவார்த்தையும் நடத்தியதோடு, சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். அப்போது, கடந்த வாரம் ஆங்கிலக்கால்வாயில் நடந்த உயிரிழப்புகள், ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறது என்பதை Ankie ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், ப்ரீத்தி பட்டேல் மேலும் சில ஐரோப்பிய நாடுகளுடன் புலம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.