Categories
உலக செய்திகள்

“அரச குடும்பத்தின் ஆட்சி நாட்டிற்கு நல்லது இல்லை!”.. பிரிட்டனில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு..!!

வேல்ஸில், “இளவரசர் தேவையில்லை” என்று எழுதப்பட்ட மிகப்பெரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வேல்ஸின் தலைநகர், Cardiff, Aberdare மற்றும் Swansea போன்ற நகர்களில், “இளவரசரான சார்லஸின் புகைப்படத்தை வெளியிட்டு, “இளவரசர் எங்களுக்கு தேவையில்லை”, “அரச குடும்பத்தின் ஆட்சி பிரிட்டனுக்கு கேடு”, “சுற்றுலாவிற்கும் நல்லது இல்லை”, நாட்டிற்கு அரச குடும்பத்தினரால் வருடந்தோறும் 345 மில்லியன் பவுண்டுகள் செலவாகிறது.

இந்த பணத்தை வைத்து, செவிலியர்கள் சுமார் 13,000 பேருக்கு சம்பளம் வழங்கலாம் என்று எழுதப்பட்ட மிகப்பெரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கிறது. Republic என்ற அமைப்பு தான் இதற்கு பின்னணியில் இருக்கிறது. “அரச குடும்பத்தின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்” என்ற முழக்கத்துடன் இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கு, தற்போது வரை 25 ஆயிரம் பவுண்டுகள் நிதி கிடைத்திருக்கிறது. அதாவது, இந்த அமைப்பினர், பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் அவர்களுடன் நாட்டில் அரச குடும்பத்தின் ஆட்சி முடிவு பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனினும், இந்த கருத்து நாட்டு மக்களின் கருத்து இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளார்கள். நாட்டுமக்கள், இளவரசர் சார்லஸ், மன்னராவதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்கள்.

Categories

Tech |