பிரிட்டன் அரசு ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நிறுவனங்களோடு ஒரு மணி நேரத்திற்கு 360 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரயிலை தயாரிப்பதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது.
பிரிட்டனில் புல்லட் ரயில்களை இயக்கக்கூடிய பணிகள் தீவிரமாக நடக்கிறது. அதன்படி சுமார் 360 கிமீ அமெரிக்க டாலர்கள் செலவில், 54 மின்சார ரயில்களை தயாரிப்பதற்காக பிரிட்டன் அரசு, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. லண்டனில் புறப்பட்டு, லிவர்பூல், மான்செஸ்டர் மற்றும் கிளாஸ்கோ நகரங்களுக்கு இடையில் இந்த அதிவேக ரயில்களை செயல்படுத்த, ரயில்வே போக்குவரத்து துறை தீர்மானித்திருக்கிறது.
மிட்லாண்ட்ஸ் மற்றும் லண்டனிற்கு இடையில் புதிய பாதை கட்டப்பட்டு வருகிறது. அப்பாதையின், தொடக்க பகுதியில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. பிரிட்டனின் வடக்கு பகுதியில் இருக்கும், கிளாஸ்கோ, மான்செஸ்டர் மற்றும் லிவர்பூல் நகரங்களில் தற்போது இருக்கும் ரயில்வேக்களில் அவை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பர்மிங்காம் என்ற பிரிட்டனின் பெரிய நகரத்துடன், லண்டனை சேர்க்கும் தொடக்க கட்டம் 2029 முதல் 2030-ஆம் வருடத்திற்குள் திறக்கப்பட இருக்கிறது. இன்னும் சில வருடங்களில் ஒரு மணி நேரத்திற்கு 360 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் அதிவேக மின்சார ரயில்கள் பிரிட்டனில் செயல்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.