பிரான்சில் மலை ஏற்றத்திற்கு சென்ற பிரித்தானிய பெண் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த நவம்பர் மாதம் 22-ஆம் தேதி அன்று Esther Dingley (37) எனும் பிரித்தானிய பெண் பிரான்சில் மலை ஏற்றத்திற்காக சென்றிருந்த நிலையில் வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி ஒன்றை தனது காதலருக்கு அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பிறகு அந்தப் பெண்ணிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து Esther-ன் காதலரான Daniel colegate காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் Esther-ஐ தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால் அந்த முயற்சிகளால் எந்தவித பலனும் கிடைக்கவில்லை.
இதையடுத்து இரண்டு வாரத்தில் Esther-ன் எலும்பு கூடு கிடைத்ததாகவும், அந்த எலும்பு DNA பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதற்கிடையே தனது காதலியின் உடலை Daniel தீவிரமாக தேடி வந்துள்ளார். அப்பொழுது தான் Esther-ன் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், Esther-ன் பொருள்கள் மற்றும் உடல் பாகங்கள் எலும்பு கூட்டின் அருகே கிடந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Esther-ன் மரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.