Categories
உலக செய்திகள்

பிரிட்டன் இளவரசருக்கு என்ன ஆச்சு ? மருத்துவமணியில் திடீர் அனுமதி… வெளியான பரபரப்பு அறிக்கை ..!!

பிரிட்டன் இளவரசரான பிலிப் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது .

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை பிரிட்டன் இளவரசர் பிலிப்(99) உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது .இளவரசர் லண்டனில் உள்ள கிங் எட்வர்ட் VII மருத்துவமனைக்கு மருத்துவரின் ஆலோசனையில் அனுமதிக்கப்பட்டதாக அரண்மனை தெரிவித்துள்ளது .

ஆனால் பிலிப்  உடல்நிலை சரியில்லாத காரணத்திற்கு கொரோனா வைரஸ் காரணம் எனவும், நல்ல மனநிலையில் தான் அவர் இருப்பதாகவும் ,சில நாட்கள் ஓய்வெடுப்பார் என்றும் எதிர்பாக்கப்படுகிறது. மேலும் மகாராணி தற்போது வின்ட்சர்ல் இருக்கிறார் கடந்த மாதம் தான் மகாராணியும்,இளவரசரும் கொரோனா  தடுப்பூசியை செலுத்திக்கொண்டது  குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |