பிரிட்டன் நாட்டின் அம்பர் பட்டியலில், பிரான்ஸ் அடுத்த வாரத்தில் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் அரசு, ஆம்பர் பட்டியலில் பிரான்சை இணைத்தால் பிரான்ஸ் நாட்டிலிருந்து பிரிட்டன் செல்லும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய பயணிகள் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள். எனினும் பிரிட்டன் அரசு கடந்த வாரத்தில் அம்பர் பிளஸ் என்ற புதிய வகை பிரிவை உருவாக்கியிருக்கிறது.
இந்த பட்டியலில் இருக்கும் நாடுகளிலிருந்து பிரிட்டன் செல்லும் மக்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் தனிமைப்படுத்தப்படுவார்கள். பிரிட்டன் அரசு பிரான்சில் பீட்டா மாறுபாடு தென்பட்டதால் அந்நாட்டை அம்பர் பட்டியலில் தான் இணைத்திருக்கிறது. எனவே பிரிட்டன் அரசின் இந்த செயல்பாட்டிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அதாவது ஸ்பெயின் நாட்டில் பீட்டா மாறுபாடு அதிகமாக பரவி இருந்தாலும், அதனை பிரிட்டன் அரசு அம்பர் பட்டியலில் தான் இணைந்திருந்தது. இந்நிலையில் பிரிட்டனின் சுற்றுச்சூழல் செயலாளரான George Eustice, பிரான்ஸ் உட்பட பல நாடுகளை அம்பர் பட்டியலில் இணைக்க தான் விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.