பிரிட்டன் நாட்டிலிருந்து ராணுவ வீரர்கள் சுமார் 1600 பேர் தற்போது எஸ்டோனியாவிற்கு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த 1600 இராணுவ வீரர்கள், நேட்டோ நடவடிக்கைக்காக எஸ்டோனியா என்ற ஐரோப்பிய நாட்டின் எல்லை பகுதியிலிருந்து சுமார் 70 மைல் தூரத்தில் இருக்கும் தாபா இராணுவ தளத்தில் களமிறங்கியிருக்கிறார்கள்.
ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது ரசாயன குண்டுகளை வீசினாலோ அல்லது எஸ்டோனியா மீது படையெடுதாலோ, உடனே பதிலடி கொடுப்பதற்காக அவர்கள் களமிறங்கியுள்ளனர்.
நேட்டோ போர்க் குழுவின் தலைமை தாங்கும் லெப்டினன்ட் கர்னல் ரு ஸ்ட்ரீட்ஃபீல்ட், ரஷ்ய அதிபர், எஸ்டோனியா மீது படையெடுக்க உத்தரவு பிறப்பித்தால், தன் படைகள் 100 சதவீதம் தயாராகவுள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.
தாபா இராணுவ தளமான எக்சர்சைஸ் போல்ட் டிராகனில் பெரிய அளவில் நடந்த பயிற்சியில், பிரிட்டன் நாட்டில் சேலஞ்சர் 2 டாங்கிகள், பொறியாளர்கள், கவச காலாட்படை, தளவாடங்கள், பீரங்கி போன்ற டாங்கிகளை வைத்து பிரெஞ்சு, பிரிட்டன், டேனிஷ், எஸ்டோனிய வீரர்கள் 2,300 பேர் பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.