பிரிட்டனில் அடுத்து வரும் இரண்டு தலைமுறைகளுடன் முடியாட்சி முடியவுள்ளதால் குட்டி இளவரசரான ஜார்ஜ் மன்னராக வாய்ப்பு கிடையாது என்று பிரபல நாவலாசிரியர் கூறுகிறார்.
பிரிட்டன் நாட்டின் முடியாட்சி குறித்து பிரபல நாவலாசிரியரான ஹிலாரி மாண்டெல் கணித்திருபத்தாவது, பிரிட்டன் நாட்டினுடைய முடியாட்சியானது, தற்போது இருக்கும் சூழ்நிலையில், இளவரசர் சார்லஸ் மற்றும் வில்லியம் போன்றோருடன் முடிவு பெறும் என்று கூறுகிறார்.
குட்டி இளவரசரான 8 வயதுடைய ஜார்ஜ், மன்னராகப்போகும் வரிசையில் மூன்றாவதாக இருக்கிறார். எனினும் அவருக்கு அதற்கான வாய்ப்பு இருக்காது என்று ஹிலாரி தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல், தொழில்நுட்பமயமாக்கல் காரணத்தினால் பிரிட்டன் நாட்டின் முடியாட்சியானது, அடுத்து வரும் இரு தலைமுறைகளுக்கு தான் இருக்கும். அதன்படி, இங்கிலாந்தின் கடைசி மன்னர், இளவரசர் வில்லியம் தான் என்று கூறியிருக்கிறார்.