ஐ.நா பருவநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்காத ஜின்பிங், புதின் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.
பிரிட்டன் நாட்டின் கிளாஸ்கோ நகரில் உலகளாவிய வெப்பநிலை குறைப்பது தொடர்பான பருவநிலை மாற்றத்தின் ஐ.நா உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற நிலையில், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் கலந்து கொள்ளாமல், இரு நாட்டின் சார்பில் தூதுக்குழுக்கள் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த பருவநிலை மாற்ற மாநாட்டில், நேற்று முன்தினம் இரவு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், “உலகத்தின் தலைவராக சீனா புதிய பங்களிப்பு செய்ய முயற்சிக்கிறது. ஆனால், இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொள்ளாதது மிகப்பெரிய தவறு ஆகும். மேலும், ரஷிய காடுகள் எரிகின்ற போதும் அந்நாட்டு அதிபர் வாய் திறக்காமல் அமைதியாக உள்ளார்.
அதோடு, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என அவரது செயலாளர் திமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார். இந்த தகவலை கடந்த மாதம் அறிவித்தபோது, அதற்கான சரியான காரணத்தை அவர் கூறவில்லை. எனவே பருவநிலை மாற்றம் என்பது ரஷியா முக்கிய முன்னுரிமை அளிக்க வேண்டிய பிரச்சினை ஆகும்” என்றும் அவர் கூறினார்.