பிரிட்டன் மக்களுக்கு பிரெக்சிட் காரணமாக பிரான்சில் வேலைவாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
பிரிட்டன் மக்கள் பிரான்சில் பனிச்சறுக்கு சீசனில் பணியாற்றுவது, நீண்ட நாட்களாக மிக பிரபலமானதாக உள்ளது. எனினும் பிரெக்சிட் காரணமாக இதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது பணி கொடுக்கும் பல்வேறு நிறுவனங்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் பாஸ்போர்ட் உள்ளவர்களுக்கும், பிரெஞ்சு வாழிட உரிமம் உள்ளவர்களுக்கும் தான் பனிச்சறுக்கு மையங்களில் பணி என்று அறிவித்துள்ளது.
மேலும் பிற பிரிட்டன் மக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரெஞ்சு பனிச்சறுக்குத் துறை, 2021 மற்றும் 2022 ஆம் வருடத்திற்கான பணியிடங்களுக்கு விளம்பரம் கொடுத்திருக்கிறது. பிரெக்சிட்டின் மாற்றக்காலம் முடிவடைந்தது.
அன்றிலிருந்து, பிரான்சில் பணியாற்ற விரும்பும் பிரிட்டன் மக்களுக்கு, விசா மற்றும் பணியாற்றக்கூடிய உரிமமும் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்காலிகமாக பணியாற்ற விரும்புபவர்களிடம் அவையெல்லாம் இருக்காது.
எனவே, வேலை வாய்ப்பு கொடுப்பவர்கள் பிரிட்டன் மக்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு முன்வராததால், தற்காலிகமாக பணியாற்றும் பிரிட்டன் நபர்கள் சுமார் 25,000 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக வர்த்தக அமைப்பு தெரிவித்திருக்கிறது.