Categories
உலக செய்திகள்

பிரியங்கா சோப்ராவை வறுத்தெடுத்த பிரிட்டன் மக்கள்.. அப்படி என்ன செய்தார்..? வெளியான வீடியோ..!!

பிரிட்டனில், இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியை இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா  அவமரியாதை செய்ததாக அரச குடும்பத்தின் ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளார்கள்.

கடந்த சனிக்கிழமை அன்று விம்பிள்டன் மைதானத்தில் மகளிர் ஒற்றையர் ஆட்டம் நடந்தது. எனவே இளவரசர் வில்லியம்-கேட் தம்பதி ஆட்டத்தை காண வந்திருந்தார்கள். அவர்கள், முக்கியமான நபர்கள் அமரக்கூடிய இடத்திற்கு வந்தார்கள். எனவே அங்கு அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் தம்பதியை வரவேற்றார்கள்.

ஆனால் அங்கு அமர்ந்திருந்த இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா மட்டும் அவர்களை பார்க்காமல் வேறு பக்கமாக திரும்பிக்கொண்டார். அந்த வீடியோ வெளியாகியது. இதனை பார்த்த அரச குடும்பத்தின் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். அதில் ஒருவர், இது என்ன பழக்கம், பிரியங்கா சோப்ரா போன்ற சிலர் இளவரசர்களுக்கு கூட மரியாதை தர மாட்டார்களா? என்றார்.

மற்றொருவர், அவர் மேகனுக்கு உண்மையாக இருக்கிறாராம் என்று கூறியுள்ளார். அதாவது இளவரசர் ஹாரியின் மனைவி மேகனின் நெருங்கிய தோழி பிரியங்கா சோப்ரா. எனவே தன் தோழி மேகனுக்காக வில்லியம்-கேட் இளவரச தம்பதியரை அவர் புறக்கணித்ததாக தெரிகிறது.

Categories

Tech |