சுவிட்சர்லாந்தில் வருடந்தோறும் நடந்துவரும் ஒரு இசை நிகழ்ச்சியில் பிரிட்டனை சேர்ந்த பிரபல இசைக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ரத்தாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு வருடமும் The Montreux Jazz Festival என்ற இசை விழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான இசை நிகழ்ச்சியில் பிரிட்டன் இசைக்கலைஞர்கள் Alfa Mist, Rag’n’Bone Man மற்றும் Inhaler போன்றோரின் இசை நிகழ்ச்சி நடைபெற இருந்தது. ஆனால் தற்போது பிரிட்டனில் டெல்டா வைரஸ் பரவி வருவதால் அங்கிருந்து வரும் மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
எனவே இந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டன் இசைக்கலைஞர்களுக்கு மாற்றாக, வேறு இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடைபெறும். இல்லையெனில் மக்களிடம் நிகழ்ச்சிக்காக வசூலித்த பணம் திரும்ப அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.