Categories
உலக செய்திகள்

“வெளிநாடுகளுக்கு பயணிக்க 3 டோஸ் தடுப்பூசி தேவைப்படலாம்!”.. பிரிட்டனில் வெளியான தகவல்..!!

அடுத்த வருடம் வெளிநாடு பயணிக்கவுள்ள பிரிட்டன் மக்களுக்கு மூன்று தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் தடுப்பூசி கடவுச்சீட்டு தொடர்பில் மாற்றங்கள் கொண்டு வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த வருட கடைசியில் 50 வயதிற்கு குறைவாக இருக்கும் பிரிட்டன் மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது அமைச்சர் கில்லியன் கீகன் தடுப்பூசி கடவுச்சீட்டு தொடர்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்த பின்பு இந்த தகவல் வெளியாகியிருக்கிறது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்பு, தடுப்பூசி கடவுச்சீட்டு தொடர்பில் மாற்றங்கள் நிகழ்வது குறித்து தீர்மானிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

எனினும், தற்போது தான் பூஸ்டர் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். மேலும், பூஸ்டர் தடுப்பூசி பிரிட்டன் மக்கள் அனைவருக்கும் இந்த வருட கடைசிக்கு பின்பு தான் கிடைக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், சமீப நாட்களில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு, மேலும் ஆறு மாதங்கள் கழித்து தான் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும். எனவே மேலும் தாமதமாகலாம் என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |