பிரிட்டன் பிரதமரின் மூன்றாவது மனைவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சனின் மூன்றாவது மனைவியான கேரிக்கு லண்டன் மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. மேலும் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதாக அவர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதிலும் அவரின் முதல் மனைவியான அலெக்ரா மோஸ்டின்-ஓவனுக்கு குழந்தை இல்லை.
இதனை அடுத்து அவர் இரண்டாவதாக மெரினா வீலர் என்ற வழக்கறிஞரை இரண்டாவதாக திருமணம் செய்தார். அவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளன. இதனை தொடர்ந்து அவர் கேரி எனும் பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அவருக்கு தற்பொழுது இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. குறிப்பாக 57 வயதான அவருக்கு இது ஆறாவது குழந்தையாகும்.