பிரிட்டனில் தற்போது பிரதமர் தேர்தல் நடத்தினால், ரிஷி சுனக் வெற்றியடைந்திருப்பார் என கட்சி வாக்காளர்களிடம் மீண்டும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்திருக்கிறது.
பிரிட்டன் பிரதமர் பதவிக்காக இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் போட்டியிட்ட நிலையில் லிஸ் ட்ரஸ் வெற்றிபெற்றார். இந்நிலையில் மீண்டும் கட்சி வாக்காளர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 55% ரிஷி சுனக்கிற்கு ஆதரவு கிடைத்திருக்கிறது.
தேர்தலில் லிஸ் டிரஸிற்கு வாக்களித்தவர்கள் பலரும் வருத்தம் தெரிவித்ததாக கூறப்பட்டிருக்கிறது. நாட்டின் புதிய பிரதமரை நியமிக்க நடத்தப்பட்ட கட்சி தேர்தலில் லிஸ் ட்ரஸ் வெற்றியடைந்து பிரதமர் ஆனார். அதன் பிறகு கடந்த மாதத்தில் வரி சலுகைகளோடு சேர்த்து அவர் மினி பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார்.
இதனால் பெருமளவில் பொருளாதார நிலைக்குலைவு உண்டானது. அதன் பிறகு அவர் நிதி அமைச்சரை மாற்றி விட்டார். இதனால் கட்சி வாக்காளர்கள் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.