பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாட்டின் உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேலுடன் கோவிலுக்கு சென்று தீபாவளியை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.
பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன், உள்துறைச் செயலர் ப்ரீத்தி பட்டேலுடன் தீபாவளியைக் கொண்டாடியிருக்கிறார். இவர்கள் இருவரும், லண்டனில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டுள்ளனர்.
வழக்கமாக மேற்கத்திய ஆடை அணியும் பிரீத்தி பட்டேல், Neasden என்ற இடத்தில் இருக்கும் அந்த கோவிலில் இந்திய ஆடையை அணிந்து காணப்படுகிறார். மேலும், பிரதமரும், ப்ரீத்தி பட்டேலும் தங்கள் கழுத்தில் மாலையை அணிந்திருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகியிருக்கிறது.